சைக்கிளிங் போட்டியில் பதக்கம்; கோவை வீராங்கனைகள் அசத்தல்

கோவை; பீகாரில் நடந்து வரும் 'கேலோ இந்தியா யூத் கேம்' போட்டியில், கோவை வீராங்கனைகள் இருவர் உட்பட மூவர், வெண்கலம் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் 'கேலோ இந்தியா யூத் கேம்' போட்டிகள் நேற்று முன்தினம் துவங்கியது; இன்று நிறைவடைகிறது. இதில், மகாராஷ்டிரா, டில்லி, கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 250 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

பெண்களுக்கான சைக்கிளிங் தனிநபர் 'டைம் டிரையல்' போட்டியில் கோவையை சேர்ந்த தபிதா வெண்கலம் வென்றார். குழு போட்டியில் கோவையை சேர்ந்த தபிதா, ஜெய் ஜோட்சனா, துாத்துக்குடியை சேர்ந்த நிறைமதி ஆகியோர் அடங்கிய அணி வெண்கலம் வென்று, தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளது. வெற்றி பெற்ற வீராங்கனைகளை, கோவை மாவட்ட சைக்கிளிங் சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.

Advertisement