ஆந்திர மாநில நாவல் பழம்விற்பனை படுஜோர்




தர்மபுரி,:தர்மபுரியில் மருத்துவ குணம் மிக்க நாவல் பழம், கிலோ, 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில், 'ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி, குப்பம் பகுதிகளிலிருந்து நாவல் பழங்கள் தற்போது விற்பனைக்கு வருகின்றன.
கிலோ, 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சில வாரங்களில் நாவல் பழம் வரத்து அதிகரிக்கும். அப்போது நாவல் பழத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது' என்றனர்.

Advertisement