பாத்ரூம் சீட் வெடித்து இளைஞர் படுகாயம்

நொய்டா:நொய்டாவில் வசிக்கும் ஆஷு, 20, சமீபத்தில் தன் வீட்டில் உள்ள மேற்கத்திய பாணி நவீன கழிப்பறையை பயன்படுத்தினார். கழிவுகளை வெளியேற்ற டாய்லெட் சீட்டில் அமர்ந்தபடி, 'பிளஷ்' பொத்தானை அழுத்தினார்.


அப்போது திடீரென வெடி வெடித்தது போல சத்தம் கேட்டது; ஆஷுவின் பின்புறம் மற்றும் உடல் முழுக்க தீப்பற்றியது. அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு 35 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறினர். கழிப்பறை குழாயில் சேர்ந்திருந்த மீத்தேன் வாயு வெடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Advertisement