12ம் வகுப்பு பொதுத்தேர்வு 'ரிசல்ட்' வெளியானது: 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி

19

சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் வெளியிட்டார். 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்


தமிழக அரசின் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு, கடந்த மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடந்தன. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இன்று (மே 8) காலை 9 மணிக்கு வெளியிட்டது. மொத்தம் 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை: 7,92,494


இதில், மாணவிகள் எண்ணிக்கை- 4,19,316

மாணவர்கள் எண்ணிக்கை- 3,73,178

மாணவிகளே அதிகம்!



* தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 96.70% பேரும், மாணவர்கள் 93.16% பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம்




அரசுப் பள்ளிகள்- 91.94%



அரசு உதவிப்பெறும் பள்ளிகள்- 95.71%



தனியார் பள்ளிகள்-98.88%

'டாப் 5' மாவட்டங்கள்



அரியலூர்-98.82%

ஈரோடு-97.98%


திருப்பூர்-97.53%


கோவை-97.48 %


கன்னியாகுமரி-97.01%

100/100 மதிப்பெண்கள் பெற்றவர்கள்!



தமிழ்- 135 பேர்,


இயற்பியல்- 1,125 பேர்,



வேதியியல்- 3,181 பேர்,

கணிதம்- 3,022 பேர்,

விலங்கியல்- 36 பேர்,

உயிரியல்- 827 பேர்,

தாவரவியல் 269 பேர்,


கணினி அறிவியல் 9,536 பேர்,


வணிகவியல் 1,624 பேர்,


கணக்குப் பதிவியல் 1,240 பேர்,


பொருளியல் 556 பேர்,


புள்ளியியல் 273 பேர்,

சிறைவாசிகள் 130 பேர் தேர்ச்சி



* தேர்வு எழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 140. இதில் 130 பேர் (92.86%) தேர்ச்சி பெற்று உள்ளனர்.



* தேர்வு எழுதிய மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 8,019. இதில் 7,4,66 பேர் (93.10%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

* தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள் எண்ணிக்கை 16.904. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 5,500 (32.54%).

ஏதேனும் ஒரு பாடத்தில் 100/100!



* ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் எண்ணிக்கை- 26,887.


* ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகள் எண்ணிக்கை- 2,853


மாணவர்கள் தங்களின் மதிப்பெண் விபரங்களை, 'ஆன்லைன்' வழியில் தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை, https://results.digilocker.gov.in மற்றும் www.tnreuslts.nic.in ஆகிய இணையதளங்களில், தேர்வர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரின் மொபைல் எண்ணிற்கும், தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Advertisement