'ஹப்பிள்' தொலைநோக்கிக்கு வயது 35!

பெரும்பாலான இயந்திரங்கள் காலாவதி ஆகும் வயதில், 'ஹப்பிள்' விண்வெளி தொலைநோக்கி, தொடர்ந்து இயங்கி, நம்மை பிரமிக்க வைக்கிறது. விண்வெளிப் பாதையில் வலம் வரும் இந்தத் தொலைநோக்கியின் 35வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், நட்சத்திரக் கூட்டங்கள், ஒளிரும் நெபுலாக்கள், ஒன்றோடொன்று தொடர்புகொள்ளும் விண்மீன் திரள்களைக் காட்டும் புதிய படங்களை நாசா வெளியிட்டது. கடந்த 1990ல் ஏவப்பட்ட ஹப்பிள், விண்வெளியை அடைந்த பிறகே, அதன் கண்ணாடியில் சிறு குறை இருப்பது தெரிய வந்தது. அந்தக் குறையை விஞ்ஞானிகள் சரிசெய்ய எடுத்த முயற்சிகள் நல்ல பலனை தந்தன. அதன் பிறகு, ஹப்பிள், நவீன விண்வெளியியலின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது.
ஹப்பிளின் 35வது ஆண்டு கொண்டாட்டத்திற்காக, நாசா வெளியிட்ட புதிய படங்கள் இந்தக் கருவியின் துல்லியத்திற்கு சான்று. அவை ஒவ்வொன்றும் விண்வெளியியலின் மைல் கற்கள். நம் பிரபஞ்சத்தின் வயதை உறுதிப்படுத்தியது. 'இருண்மை ஆற்றல்' என்ற ஒன்று இருப்பதை தெரிவித்தது. ஏன், நமது அண்டத்தில்,கடந்த பல லட்சம் ஆண்டுகளில் என்ன நிகழ்ந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களை வழங்கியது.
பிற்பாடு, அகச் சிவப்புக் கதிர் திறனுடன், நாசா அனுப்பிய, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, மீதுதான் இப்போது எல்லோர் கவனமும் இருக்கிறது. என்றாலும், பல ஒளியியல் மற்றும் புற ஊதா ஆய்வுகளில் ஹப்பிள், அலட்சியப்படுத்த முடியாத கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியபடியே இருக்கிறது. பொறியாளர்கள், அதன் பழமையான கருவிகளை பூமியிலிருந்தபடியே சரிசெய்து, டிஜிட்டல் யுகத்திற்கு முன்பு வடிவமைக்கப்பட்ட இந்தக் கருவியிலிருந்து முடிந்த அளவு தகவல்களை பெற்று வருகின்றனர்.
மேலும்
-
ரோகித் சர்மா, கோலிக்கு மாற்று யார்: இந்திய அணி தேர்வாளர்களுக்கு சோதனை
-
இருக்கை வசதியில்லாத இ - சேவை மையம் மணிக்கணக்கில் காத்திருக்கும் பகுதிவாசிகள்
-
பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால்...: கடற்படை எச்சரிக்கை
-
தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதி பீஹாரில் கைது
-
பிரிமியர் தொடர் எப்போது: ஆமதாபாத்தில் பைனல்
-
கோப்பை வென்றது இந்தியா: பெண்கள் முத்தரப்பு ஒருநாள் தொடரில்