போலி போலீஸ் அதிகாரி கைது

மதுரா:உத்தர பிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்தவர் சச்சின் சர்மா. போலீஸ் இன்ஸ்பெக்டர் சீருடை அணிந்து வலம் வந்தார். பிருந்தாவனத்தில் வசித்த சர்மாவை, மதுரா போலீசார் கைது செய்து போலீஸ் சீருடை, பூட்ஸ், பெல்ட் மற்றும் உ.பி. போலீஸ் மோனோகிராம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மிரட்டி பணம் பறித்தாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

ஆள்மாறாட்டம் மற்றும் அரசு சீருடையை தவறாகப் பயன்படுத்தியதாக சர்மா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement