தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.440 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.73,040!

2

சென்னை: சென்னையில் இன்று (மே 08) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.73,040க்கு விற்பனை ஆகிறது.


அமெரிக்கா - சீனா இடையில் நிலவும் வர்த்தக போர் உள்ளிட்ட காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதனால், சில தினங்களாக, நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.



தமிழகத்தில் நேற்று முன்தினம் (மே 06) தங்கம் கிராம், 9,100 ரூபாய்க்கும், சவரன், 72,800 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 25 ரூபாய் குறைந்து, 9,075 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 200 ரூபாய் சரிவடைந்து, 72,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது.



இந்நிலையில் இன்று (மே 08) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.73,040க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,130க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தங்கம் விலை நேற்று ஒரு சவரனுக்கு ரூ.200 குறைந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.440 உயர்ந்து உள்ளது.

Advertisement