16 மருத்துவமனைகளுக்கு 300 டயாலிஸிஸ் இயந்திரம்

புதுடில்லி:வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு இலவச மற்றும் சலுகைக் கட்டணத்தில் சிறுநீரக சிகிச்சை அளிக்க, 16 அரசு மருத்துவமனைகளுக்கு, 300 'டயாலிஸிஸ்' இயந்திரங்கள் அரசு வழங்கியுள்ளது.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் பங்கஜ் குமார் சிங் கூறியதாவது:
பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டம் மற்றும் டில்லி அரசின் பொது - -தனியார் கூட்டு டயாலிசிஸ் திட்டம் ஆகியவற்றின் கீழ், டில்லியில் உள்ள 16 அரசு மருத்துவமனைகளுக்கு 300 டயாலிஸிஸ் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு இலவசமாகவும் மற்றவர்களுக்கு சலுகைக் கட்டணத்திலும் சிறுநீரக சிகிச்சை அளிக்கப்படும்.
ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழ் உள்ளோருக்கு இலவசமாக டயாலிஸிஸ் செய்யப்படும். டில்லியில் குறைந்தது மூன்று ஆண்டுகள் வசிக்கும், ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய்க்கு குறைவாக உள்ளோருக்கும் இலவசம்.
அரசு மருத்துவமனைகளின் டயாலிசிஸ் மையங்களில் கதிரியக்கவியலாளர், பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் உதவியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்.
ஆரோக்கியமான டில்லியை உருவாக்குவதற்கான பா.ஜ., அரசின் பயணத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க சேவை. சிறுநீரகங்கள் செயல் இழந்தோருக்கு டயாலிசிஸ் என்பது உயிர்காக்கும் சேவை. அது தேவைப்படும் ஒவ்வொருவரும் அவர்களின் நிதி நிலையைப் பொருட்படுத்தாமல் கண்டிப்பாக டயாலிஸிஸ் செய்தே ஆக வேண்டும்.
மொத்தம் 300 டயாலிஸிஸ் இயந்திரங்களில், 150 இயந்திரங்கள் ஏற்கனவே 10 மருத்துவமனைகளில் பிரதமரின் தேசிய டயாலிஸிஸ் திட்டத்தின் கீழ் செயல்பாட்டில் இருந்தன. மேலும், 150 புதிய இயந்திரங்கள் தற்போது ஆறு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு இந்த திட்டம் மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும்.
லோக் நாயக் மருத்துவமனை, ராஜிவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைகளில் ஏற்கனவே டயாலிசிஸ் செய்யப்படுகிறது. தற்போது டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் மருத்துவமனை, ஜனக்புரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் புராரி மருத்துவமனை ஆகியவற்றிலும் டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு; தமிழக அரசு மீது இ.பி.எஸ்., பாய்ச்சல்
-
பஞ்சாபில் பாகிஸ்தானின் ஏவுகணையை சுக்குநூறாக்கியது இந்தியா!
-
இந்தியாவுக்கு அனைத்து உரிமையும் உண்டு; ஆபரேஷன் சிந்தூருக்கு பிரிட்டன் எம்.பி., ஆதரவு
-
பிரதமர் மோடி உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு!
-
டில்லியில் கூடியது அனைத்துக் கட்சி கூட்டம்; ஆபரேஷன் சிந்தூர் குறித்து முக்கிய ஆலோசனை
-
உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது; 5 பேர் பரிதாப பலி