பஞ்சாபில் பாகிஸ்தானின் ஏவுகணையை சுக்குநூறாக்கியது இந்தியா!

6


சண்டிகர்: பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணையை இடைமறித்து இந்தியா அழித்தது.


பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 'ஆபரேஷன் சிந்துார்' என்ற பெயர் சூட்டி, நம் ராணுவம் நடத்திய அதிகாலை தாக்குதலில், ஒன்பது பயங்கரவாத தளங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு நேற்று இரவு இந்தியா மீது ஏவுகணையால் தாக்க பாகிஸ்தான் ராணுவம் முயற்சி செய்தது.


Tamil News
Tamil News

பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணையை இடைமறித்து இந்தியா அழித்தது. பஞ்சாப் எல்லையில் ட்ரோன், ஏவுகணைகளை துல்லியமாக கண்டறிந்து சுட்டு வீழ்த்தும் அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கருவிகள் பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி சுக்கு நூறாக்கியது.


தற்போது பஞ்சாபில் வயல் பகுதியில், சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணைகள் கிடக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Advertisement