சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு; தமிழக அரசு மீது இ.பி.எஸ்., பாய்ச்சல்

சேலம்: ''எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை. நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கிற ஒரே முதல்வர் ஸ்டாலின் தான்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., விமர்சனம் செய்து உள்ளார்.
சேலம் மாவட்டம் ஒமலூரில் நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை. ஆனால், தமிழகம் முன் மாதிரி மாநிலமாக இருக்கிறது என்கிறார் முதல்வர். நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கிற ஒரே முதல்வர் ஸ்டாலின் தான்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அ.தி.மு.க., வலியுறுத்தியதால் தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க., மக்களுக்காக உழைக்கின்ற கட்சி. தி.மு.க., அரசு பொறுப்பு ஏற்றதில் இருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. தமிழகத்தில் பொது மக்களுக்கும் பாதுகாப்பில்லை, முக்கியமாக பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை.
தமிழகத்திற்கான நிதியை விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்தோம். அ.தி.மு.க., கோரிக்கை அடிப்படையில் 100 நாள் வேலை திட்டம், மெட்ரோவிற்கு நிதி ஒதுக்கப்பட்டது.
அமைச்சர் ரகுபதி நான் தூங்கிக் கொண்டிருப்பதாக பேட்டி அளித்தார். நான் சிறப்பாக செயல்படுவதால் தான் பொறுத்துக் கொள்ள முடியாமல் ரகுபதி இது போன்று ஊடகத்தின் வாயிலாக வெளிப்படுத்தி உள்ளார். ரகுபதி தி.மு.க.,வின் கொத்தடிமையாக செயல்பட்டு வருகிறார். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.
வீடியோ காட்டி கேள்வி!
ஆவடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க சென்ற பெண்ணை தனியாக இருக்க அழைத்த போலீஸ்காரர் குறித்த வீடியோவை போட்டுக் காட்டி, சட்டம் ஒழுங்கு குறித்து இ.பி.எஸ்., கேள்வி எழுப்பினார்.




மேலும்
-
பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை முறியடித்தது இந்திய ராணுவம்; லாகூரில் வான் பாதுகாப்பு கவச வாகனம் அழிப்பு!
-
அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு பிரதமர் அறிவுரை
-
ஆபரேஷன் சிந்தூர் பெயரை சொந்தமாக்க 'போட்டா போட்டி'!
-
பாக்., தாக்கினால் பதிலடி நிச்சயம்: ஜெய்சங்கர் உறுதி
-
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!
-
பாக்., ராணுவ தலைமையிடங்களில் பதுங்கிய பயங்கரவாதிகள் மசூத் அசார், ஹபீஸ், சலாவுதீன்