முஷீருக்கு 'ஜாக்பாட்' * மும்பை பிரிமியர் ஏலத்தில்

மும்பை: மும்பை பிரிமியர் லீக் 'டி-20' தொடரின் மூன்றாவது சீசன், வரும் மே 26-ஜூன் 8ல், மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க உள்ளது. இதில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீரர்கள் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம் 280 வீரர்கள் இதில் பங்கேற்றனர்.
இவர்கள் 'சீனியர்' வீரர்கள் (ரூ. 5 லட்சம், முதல் தரம், லிஸ்ட் ஏ, 'டி-20'ல் பங்கேற்றவர்கள்), வளர்ந்து வரும் வீரர்கள் (ரூ. 3 லட்சம், 19, 23 வயது மும்பை அணியில் பங்கேற்றவரகள்), 'டெவலப்மென்ட்' வீரர்கள் (ரூ. 2 லட்சம், உள்ளூர், கிளப் வீரர்கள்) என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.
இளம் வீரர் முஷீர் கான், அதிகபட்சம் ரூ. 15 லட்சத்துக்கு ஏலம் போனார். இவரை அந்தேரி அணி வாங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணிக்காக விளையாடும் ஆயுஷ் மாத்ரேவுக்கு, ரூ. 14.75 லட்சம் மட்டும் கிடைத்தது. சூர்யகுமார் கேப்டனாக உள்ள மும்பை வடகிழக்கு அணி இவரை வாங்கியது.
ஷ்ரேயஸ் கேப்டனாக உள்ள மும்பை பல்கான்ஸ் அணி, ரூ. 14 லட்சம் கொடுத்து ரகுவன்ஷியை வாங்கியது. தவிர ஷாம்ஸ் முலானி (ரூ. 14 லட்சம், ஆகாஷ் டைகர்ஸ்), சூர்யான்ஷ் (ரூ. 13.75 லட்சம், மும்பை வடகிழக்கு), தனுஷ் கொடியன் (ரூ. 10 லட்சம், வடக்கு மும்பை) உள்ளிட்ட வீரர்கள் அதிக தொகைக்கு வாங்கப்பட்டனர்.
மேலும்
-
பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை முறியடித்தது இந்திய ராணுவம்; லாகூரில் வான் பாதுகாப்பு கவச வாகனம் அழிப்பு!
-
அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு பிரதமர் அறிவுரை
-
ஆபரேஷன் சிந்தூர் பெயரை சொந்தமாக்க 'போட்டா போட்டி'!
-
பாக்., தாக்கினால் பதிலடி நிச்சயம்: ஜெய்சங்கர் உறுதி
-
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!
-
பாக்., ராணுவ தலைமையிடங்களில் பதுங்கிய பயங்கரவாதிகள் மசூத் அசார், ஹபீஸ், சலாவுதீன்