அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

10

சென்னை: இலாகா மாற்றப்பட்ட நிலையில் அமைச்சர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், அவரிடமிருந்து கனிமவளத்துறை பறிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், சளி பிரச்னை காரணமாக அமைச்சர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பரிசோதனைக்கு பிறகு இன்று துரைமுருகன் வீடு திரும்புவார் என தெரிகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement