கோவில்களில் மஹா கும்பாபிேஷகம் கோலாகலம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, செல்வவிநாயகர் கோவிலில் கும்பாபிேஷக விழா நடந்தது.

பொள்ளாச்சி அருகே, நெல்லிமேடு அருகே வடக்குப்பாறை செல்வவிநாயகர், முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழா, திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது.

தொடர்ந்து, முளைப்பாலிகை வழிபாடு, முதல்கால வேள்வி, பேரொளி வழிபாடு உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. அதன்பின், எண்வகை மருந்து சாற்றுதல் நடந்தது.

இரண்டாம் கால யாக வேள்வி, மலர் அர்ச்சனை வழிபாடு, திருக்குடங்கள் திருஉலா கொண்டு வரப்பட்டு, மஹா கும்பாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து மஹா அபிேஷகம், பேரொளி வழிபாடு, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

* வால்பாறை அடுத்துள்ள சின்கோனா(டான்டீ) இரண்டாம் டிவிஷனில் உள்ள, துர்க்கை அம்மன், கருப்பசாமி, மதுரை வீரன் கோவிலின் மஹா கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, பல்வேறு கோவில்களிலில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்ததை ஊர்வலமாக பக்தர்கள் கோவிலுக்கு எடுத்து சென்றனர்.

நேற்று முன்தினம் காலை, இரண்டாம்கால யாக வேள்வி, மூலமந்திர ேஹாமம், தீபாராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நாடி சந்தானம், யாத்ரா தானம், கடம்புறப்பாடு நடந்தது.

காலை, 9:30 மணிக்கு யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித தீர்த்தை, பக்தர்கள் எடுத்து கோவிலை வலம் வந்த பின், விமான கலசத்துக்கு மஹா கும்பாபிேஷகம் நடந்தது.

தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு மாங்கல்ய தாரணம், கோபூஜை, தசதரிசனம், மஹா தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் நுாற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

* ஆத்துப்பொள்ளாச்சி அன்னை காமாட்சி அம்மன், பெருமாள்சாமி கோவிலில் கும்பாபிேஷக விழா தீர்த்தம், முளைப்பாரி ஊர்வலமாக எடுத்தலுடன் துவங்கியது.தொடர்ந்து, திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, மூலமூர்த்திகள் திருக்குடங்கள் வேள்விச்சாலைக்கு எழுந்தருளல், முதற்கால வேள்வி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இரண்டாம் கால வேள்வி, நாடி சந்தானம், வேள்வி நிறைவு நடந்தது. திருக்குடங்கள் புறப்படுதல் நிகழ்ச்சியும், விமான கும்பாபிேஷகம், அன்னை காமாட்சியம்மனுக்கு கும்பாபிேஷகமும் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பின், திருமஞ்சனம், பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் நடந்தது.

Advertisement