ஆலோசனைகள் வரவேற்பு அஞ்சல் துறை அறிவிப்பு

சென்னை:'தபால் சேவைகளின் தரம் மற்றும் வாடிக்கையாளர்களின் சேவைகளை மேம்படுத்த, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை அனுப்பலாம்' என, தமிழ்நாடு வட்டம், முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழ்நாடு வட்டம், அஞ்சல் துறை சார்பில், வட்ட அளவிலான வாடிக்கையாளர் குறை தீர்வு முகாம் நடக்க உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 11,832 தபால் நிலையங்களில் சேவை பெறும், அனைத்து வாடிக்கையாளர்களும் இதில் பங்கேற்கலாம்.

இதையொட்டி, தபால் சேவைகளின் தரம் மற்றும் வாடிக்கையாளர்களின் சேவைகளை சிறப்பாக மேம்படுத்துவது குறித்து, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

கருத்து தெரிவிக்க விரும்புவோர், தங்கள் கருத்துக்களை, 'டாக் அதாலத்' என்ற தலைப்புடன், ஏ.சுந்தரேஸ்வரி, உதவி இயக்குநர், முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை - 600002 என்ற முகவரிக்கு, வரும் 22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும், 'pg.tn@indiapos t.gov.in' என்ற 'இ - மெயில்' முகவரிக்கும், கருத்துக்களை அனுப்பலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement