தி.மு.க., 4 ஆண்டு சாதனை விளக்கபொதுக்கூட்டம் நடத்த தீர்மானம்



தர்மபுரி,:தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் வகையில் ஒன்றியம் தோறும் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டுமென, தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில், தி.மு.க., மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. அவைத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான மணி, மாவட்ட பொருளாளர் முருகன், மாநில நிர்வாகிகள் சூடப்பட்டி சுப்பிரமணி, ராஜேந்திரன், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் பேசியதாவது:

தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட சாதனை திட்டங்கள் குறித்து ஒன்றியங்கள் தோறும் பொதுக்கூட்டங்கள் நடத்தி பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். வரும் ஜூன், 3ல், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்தொடர்ந்து மதுரையில் வரும், ஜூன், 1ல் நடக்கும் பொதுக்குழு கூட்டம், சட்ட சபை தேர்தல் பணிகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதேபோல தர்மபுரியில், கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் மணி தலைமையில் நடந்தது.
டவுன் பஞ்., தலைவர்கள் மனோகரன் (காரிமங்கலம்), முரளி (பாலக்கோடு), வெங்கடேசன் (மாரண்டஹள்ளி), ஒன்றிய செயலாளர்கள் பஞ்சப்பள்ளி அன்பழகன், வக்கீல் கோபால், கண்ணபெருமாள், அடிலம் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement