பாக்.,கிற்கு பதிலடி கொடுக்க தயார்நிலையில் இந்திய கடற்படை!

புதுடில்லி: துறைமுகங்கள், கடற்பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நிகழ்த்தினால் பதிலடி கொடுக்க இந்திய கடற்படை தயார்நிலையில் உள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையில், நம் ராணுவம், பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து தாக்கி அழித்தது. கராச்சி துறைமுகம் மீது ஐ.என்.எஸ்., விக்ராந்த் போர்க்கப்பல் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் மும்பையில் மீனவர்களுடன் இந்திய கடற்படை ஆலோசனை நடத்தியது. பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து அரபிக்கடல் பிராந்தியம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் இந்திய கடற்படை கொண்டு வந்துள்ளது.
துறைமுகங்கள், கடற்பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நிகழ்த்தினால் பதிலடி கொடுக்க இந்திய கடற்படை தயார்நிலையில் உள்ளது. அரபிக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது


மேலும்
-
ஆதாரங்களை கொடுத்தாலும் பயங்கரவாத தொடர்பை மறுக்கும் பாக்.,: இந்திய தூதர்
-
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
-
பொய்த்தகவல் பரப்பி உலகத்தை ஏமாற்றும் பாகிஸ்தான்!
-
எல்லையோர மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு; குஜராத்தில் பட்டாசு, டிரோன்களுக்கு தடை!
-
பயணிகள் விமானங்களை கேடயமாக பயன்படுத்தும் பாகிஸ்தான்: இந்தியா குற்றச்சாட்டு
-
பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் அனைத்தும் அழிப்பு; உறுதி செய்தது மத்திய அரசு