டில்லி இந்தியா கேட் பகுதிகளில் மக்களுக்கு தடை; சண்டிகரில் எச்சரிக்கை ஒலி

புதுடில்லி: இந்தியா கேட், ஜமா மசூதி, செங்கோட்டை உள்ளிட்ட இடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் எல்லையில், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் விமானப்படை தளங்களை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நேற்றிரவு நடத்தியது. இவற்றை நம் படைகள், வான்வழி தாக்குதல் பாதுகாப்பு கவசத்தைப் பயன்படுத்தி, நடுவானிலேயே அழித்தன.
இந்நிலையில், எல்லையோர மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. எல்லையில் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் உள்ளனர். டில்லி இந்தியா கேட் பகுதியில் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, வரலாற்று நினைவுச்சின்னங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா கேட், ஜும்மா மசூதி, செங்கோட்டை உள்ளிட்ட இடங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டு, அவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. டில்லி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சண்டிகரில் எச்சரிக்கை ஒலி
சண்டிகரில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது. சண்டிகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து எச்சரிக்கை ஒலி விடுக்கபட்டுள்ளது. அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், பால்கனிகளில் இருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வான்வழி தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
டில்லியிலும்
தேசிய தலைநகர் டில்லியிலும் எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதனை அமைச்சர் பர்வேஷ் வர்மா பார்வையிட்டார்.
மேலும்
-
சென்னை, வேலூரில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.4.73 கோடி பறிமுதல்
-
இந்தியா-பாக்., மோதல் எதிரொலி: டில்லி விமான நிலையத்தில் 2 நாட்களில் 228 விமானங்கள் ரத்து
-
இந்தியா தாக்குதலில் பாக்., ராணுவ தளங்கள், முகாம்கள் சேதம்!
-
பாக்., ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு; நமது படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு
-
அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை
-
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: தலையிட உலக வங்கி மறுப்பு