ரயிலில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்; திரிபுராவில் பரபரப்பு

அகர்தலா: திரிபுராவில் ரயிலில் கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை இந்தியா தீவிரப்படுத்தப்படுத்திய நிலையில், விமான நிலையங்கள், ரயில்நிலையங்களில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பயணிகளிடையே கடும் சோதனை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், பதர்பூரில் இருந்து அகர்தலா நோக்கி சென்று கொண்டிருந்த யு.பி., திரிபுரா சுந்தரி எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது, ரயிலின் மேல் படுக்கையில் வைக்கப்பட்டிருந்த 2 பேக்குகளை சோதனை செய்தனர்.

அதில், 8 துப்பாக்கிகளும், 16 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement