பட்டாசு தொழிலாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை
பாப்பிரெட்டிப்பட்டி,:பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி, குப்பனுார் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. வெப்ப அலை காரணமாக தீப்பிடித்தலை தடுக்கவும், பட்டாசு வெடித்தலை தடுக்கவும், வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தீயை அணைப்பது என்பது பற்றியும் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) பிரகாசம் தலைமையில் ஒத்திகை பயிற்சி நடந்தது.
இதில் பொது இடங்கள், மலை பகுதிகளில் உள்ள இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் பதற்றம் அடையாமல் அருகிலுள்ள மணல், தண்ணீர் மற்றும் தீ அணைப்பான் கருவியை பயன்படுத்தி தீயை அணைத்தல், தீ விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு முதலுதவி செய்தல், தீயணைப்பு உபகரணங்கள் பராமரித்தல் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
மேலும் தீ விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. தீயை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு பயிற்சி அளித்தனர். இந்தப் பயிற்சியில் குப்பனூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
அரபிக்கடல் பிராந்தியம் முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது கடற்படை!
-
எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு