முன்பருவ கல்வி முடித்த 117 பேருக்கு முதன்முறையாக பட்டச்சான்று வழங்கல்
நாமக்கல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், திருச்செங்கோடு நகர்ப்புறம் சார்பில், முன்பருவ கல்வி முடித்தவர்களுக்கு பட்டச்சான்றிதழ் வழங்கும் விழா, நாமக்கல் மாநகராட்சி அங்கன்வாடி மையத்தில், நேற்று நடந்தது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் (பொ) சசிகலா தலைமை வகித்தார். ஒன்றிய திட்ட அலுவலர் வித்யாலட்சுமி வரவேற்றார். வட்டார கல்வி அ
லுவலர்கள் சந்திரவதனி, புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட கல்வி அலுவலர் பச்சமுத்து, குழந்தைகளுக்கு பட்டச்சான்று வழங்கினார். அவர் பேசுகையில், ''முன்பருவ கல்வி என்பது, பள்ளியில் தொடக்க கல்விக்கு செல்வதற்கு முன், குழந்தைகள் பெறும் ஆரம்ப கல்வியை குறிக்கிறது. இது, குழந்தைகளை பள்ளிக்கான தயார்நிலைக்கு கொண்டு செல்ல உதவுகிறது,'' என்றார். முன்பருவ கல்வி முடித்து, முதல் வகுப்பு செல்லும், 117 மாணவ, மாணவியருக்கு, முதன் முறையாக பட்டச்சான்று வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சி கவுன்சிலர் சரவணன், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள், பெற்றோர் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
அரசு பள்ளியில் சாதனை
-
போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு
-
பொய்யான தகவல்களை பரப்பும் பாகிஸ்தான்; வெளியுறவு துறை செயலர் மிஸ்ரி குற்றச்சாட்டு
-
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்
-
போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை
-
அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது தாக்குதல்; அண்ணாமலை பேட்டி