செங்குந்தர் இன்ஜி., கல்லுாரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கம்
திருச்செங்கோடு,
திருச்செங்கோடு செங்குந்தர் பொறியியல் கல்லுாரியில், அறிவியல் துறை சார்பில், 'சாஹா-2025' என்ற தலைப்பில், 18-வது தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது. தலைவர் ஜான்சன்ஸ் நடராஜன் தலைமை வகித்தார். தாளாளர் பாலதண்டபாணி, பொருளாளர் தனசேகரன், செயல் இயக்குனர் அரவிந்த்திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல்வர் சதீஷ்குமார் வரவேற்றார். திருப்பூர் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் துரைமுருகன் சிறப்புரையாற்றினார். அப்போது, மாணவர்கள் தங்களது அறிவையும், தகவல் தொடர்பு திறன்களையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். கனவுகளையும், குறிக்கோள்களையும் தெளிவாக நிர்ணயித்து உறுதியாக பயணிக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டார். பல்வேறு கல்லுாரிகளில் இருந்து, 160 ஆராய்ச்சி படைப்புகள் பெறப்பட்டன. மாணவர்களால் எதிர்கால பொறியியல் குறித்த விளக்கப்படங்கள், சமூக நெறிமுறைகள் குறித்த குறும்படம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கருத்தரங்கை அறிவியல் துறை தலைவர் பழனிசாமி ஒருங்கிணைத்தார். ஆராய்ச்சி படைப்புகள் சமர்ப்பித்த மாணவ, -மாணவியருக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது.
மேலும்
-
பயங்கரவாத முகாம்கள் அழிப்பு; புதிய வீடியோ வெளியிட்டு ராணுவம் விளக்கம்!
-
ராணுவத்திற்கு உதவ தயார்; சண்டிகரில் குவிந்த இளைஞர்கள்!
-
அரசு பள்ளியில் சாதனை
-
போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு
-
பொய்யான தகவல்களை பரப்பும் பாகிஸ்தான்; வெளியுறவு துறை செயலர் மிஸ்ரி குற்றச்சாட்டு
-
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்