பயங்கரவாத முகாம்கள் அழிப்பு; வீடியோ வெளியிட்டு ராணுவம் விளக்கம்!

1


புதுடில்லி: பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை இன்று காலை இந்திய ராணுவம் வெளியிட்டது. இன்று மதியம் நடந்த பேச்சு வார்த்தை முடிவில், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக, வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார்.





முன்னதாக, பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது தொடர்பாக வீடியோ ஒன்றை இந்திய ராணுவம் வெளியிட்டு இருந்தது. இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாபின் பல நகரங்களில் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது.


இந்த முகாம்கள் கடந்த காலங்களில் இந்திய பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் ஒரு மையமாக இருந்தன. இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பயங்கரவாதிகளுக்கு பலத்த அடியைக் கொடுத்துள்ளது. இவ்வாறு இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Advertisement