சித்திரை தேரோட்டம்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் பெரியகோவிலில், சித்திரைப் பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நேற்று நடைபெற்றது.

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், சித்திரை பெருவிழா, ஏப்., 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் நேற்று காலை நடந்தது. கோவிலில் இருந்து ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ கமலாம்பாள், ஸ்கந்தர் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது.

பின் தேரில், ஸ்ரீ தியாகராஜர், கமலாம்பாள் எழுந்தருளினர். அப்போது, தேரை வடம் பிடித்து இழுத்தனர். பகல், 12:30 மணிக்கு தேர் நிலையத்தை அடைந்தது.


அழகில்லையே ஏன்?




தேர் சாதாரணமாக 19 அடி உயரம், 18 அடி அகலம், 40 டன் எடையும் கொண்டது. தேரை அலங்கரிக்கும்போது, 50 அடி உயரமும் 43 டன் எடையும் அதிகரித்து காணப்படும். இந்த தேரில் 252 சுவாமிகளின் சிற்பங்களும், 165 வெங்கல மணிகளும் பொருத்தப்பட்டன. கடந்த ஆண்டு தேர் அலங்காரத்தின் விட்டம் சற்று அதிகரித்ததால், மின் கம்பிகளில் தேர் சிக்கியது. எனவே, இந்த ஆண்டு, தேர் அலங்கார சீலைகளின் அகலம் குறைக்கப்பட்டு தேரோட்டம் நடந்தது. இதனால், தேர் பார்ப்பதற்கு அழகு குறைந்து காணப்பட்டது.

Advertisement