போர் பதற்றம் எதிரொலி; பயத்தில் பெட்ரோல், டீசல் நிலையங்களை மூடியது பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத்: போர் பதற்றம் எதிரொலியாக பெட்ரோல், டீசல் நிலையங்களை 48 மணி நேரத்திற்கு பாகிஸ்தான் அரசு மூட உத்தரவிட்டுள்ளது.
எல்லையை ஒட்டியுள்ள ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது. அவை அனைத்தையும் நடுவானில் மறித்து நம் ராணுவம் சுக்குநுாறாக்கியது.
எனினும், ஜம்மு காஷ்மீரில் சீக்கிய குருத்வாரா, கிறிஸ்துவ சர்ச், பொதுமக்களின் வீடுகள் ஆகியவை பாகிஸ்தான் தாக்குதலில் சேதம் அடைந்தன. இந்நிலையில் பாகிஸ்தானின் விமான நிலையங்கள், ராணுவ தளங்களை இந்திய ராணுவத்தினர் குறி வைத்து தாக்குதல் நடத்தினர்.
இந்திய பாதுகாப்பு படையினர் நடத்தும் துல்லிய தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறி வருகிறது. பெட்ரோல் நிலையங்களை குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் இருக்கும் அனைத்து பெட்ரோல், டீசல் நிலையங்களையும் 48 மணி நேரத்திற்கு மூடும்படி பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.



மேலும்
-
சந்தைகள், பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம்: ராஜஸ்தான் மக்களுக்கு அறிவிப்பு
-
இந்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் யார் யார்? வெளியானது பட்டியல்!
-
தகர்த்தெறிந்த இந்தியா; பாக்., ட்ரோன்கள், ஏவுகணைகள் சிதறியது; புகைப்படம் ஆல்பம்!
-
இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் பாகிஸ்தானால் முடியாது; சசி தரூர்
-
முப்படை தளபதிகளுடன் மோடி சந்திப்பு!
-
பயங்கரவாத முகாம்கள் அழிப்பு; புதிய வீடியோ வெளியிட்டு ராணுவம் விளக்கம்!