தரைப்பாலத்திற்கு தடுப்பு சுவர் இல்லாததால் சிருளப்பாக்கத்தில் வாகன ஓட்டிகள் அச்சம்

பொன்னேரி:பொன்னேரி அடுத்த, சிறுளப்பாக்கம் - அண்ணாமலைச்சேரி மாநில நெடுஞ்சாலையில், தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் இருக்கிறது. எதிதெிரே வாகனங்கள் பாலத்தை கடக்கும்போது அச்சம் அடைகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

அரசு பேருந்துகள், தனியார் பள்ளி வாகனங்கள் இந்த தரைப்பாலத்தின் வழியாக பயணிக்கின்றன. தரைப்பாலத்தின் இருபுறமும், ஐந்துஅடி ஆழ பள்ளம் இருக்கிறது. வாகனங்கள் தடுமாற்றத்தில் பள்ளத்தில் விழுந்து, அசம்பாவிதங்கள் நேரிடும் அபாயம் இருக்கிறது. அதை தவிர்க்க, தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர், ஒளிரும் விளக்குகள் பொருத்தி உரிய பாதுாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement