இந்திய கம்யூ., கட்சி நகர் ஒன்றிய மாநாடு 

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் இந்திய கம்யூ., நகர் ஒன்றிய மாநாடு நடந்தது. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய கம்யூ., 25 வது நகர் ஒன்றிய மாநாடு ராமநாதபுரம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. நகர் ,ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் கொடியேற்றி மாநாட்டிற்கு தலைமை வகித்தார். சி.பி.ஐ., மாவட்ட செயலாளர் பெருமாள், ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலாளர் என்.கே.ராஜன், துணை செயலாளர் தர்மராஜ் ஆகியோர் வாழ்த்தினர்.

ராமநாதபுரம் நகர் ஒன்றியகுழுவில் 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். நகர் ஒன்றிய செயலாளராக பா.சண்முகராஜன், துணைச் செயலாளராக நாகராஜன், சுப்பிரமணியன், பொருளாளராக க.பாலகுமாரன் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகி பாலாமணி நன்றி கூறினார். --

Advertisement