தமிழக அமைச்சரவை இலாகா மாற்றம்; ரகுபதியிடம் இருந்து சட்டத்துறை பறிப்பு

15


சென்னை: தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ரகுபதியிடம் இருந்து சட்டத்துறை பறிக்கப்பட்டு உள்ளது.


தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரகுபதி சட்டத்துறை அமைச்சராக இருந்து வந்தார். அவரிடம் இருந்து சட்டத்துறை பறிக்கப்பட்டு அமைச்சர் துரைமுருகனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.


அமைச்சர் துரைமுருகனிடமிருந்து கனிமவளத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இனி, அமைச்சர் ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார். நீர்வளத்துறை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் வசமே இருக்கிறது.


முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரைப்படி, அமைச்சரவை இலாகாவை மாற்றி கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.

Advertisement