“ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கை எதிரொலி: படும் பாதாளத்தில் பாகிஸ்தான் பங்குச்சந்தை!

4

இஸ்லாமாபாத்: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தானின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.


@1brபஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதல் பாகிஸ்தானின் பங்குச்சந்தையில் எதிரொலித்த நிலையில், பாகிஸ்தானின் வங்கிகள், தொழில்துறை நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டன. இந்தியாவுடனான பதட்டங்கள் காரணமாக பாகிஸ்தானின் பங்குச் சந்தை ஏற்கனவே ஆட்டம் கண்டு வருகிறது.


நேற்று ஒரே நாளில் கராச்சி பங்குச்சந்தையில் 6,500க்கும் மேல் புள்ளிகள் சரிவை சந்தித்தன. இது ஏறத்தாழ 6% சரிவாகும். இந்த சரிவு இன்றும் நீடித்தது. இன்று 5,000 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சி கண்டது. இதனால் பங்குச்சந்தையில் வர்த்தகம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.


பாகிஸ்தானில் தற்போதைய நிலவரப்படி, பங்கு சந்தை நிலைமை இன்னும் சில நாட்களுக்கு நிலையற்றதாகவே இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மேலும் வேலைநிறுத்தங்கள் அல்லது ராணுவ நடவடிக்கை நடக்கக்கூடும் என்று பலர் அஞ்சுகின்றனர், இது மேலும் பங்கு சந்தை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றனர் பொருளாதார நிபுணர்கள்.


பாகிஸ்தானுடன் ஒப்பிடும் போது, ​​இந்தியாவின் பங்கு சந்தை சிறந்த நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதத்தை காசு கொடுத்து வளர்த்த பாகிஸ்தானுக்கு தொடர்ந்து பதிலடி கிடைக்கும் என பங்குச்சந்தை சரிவை மேற்கோள் காட்டி, சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement