பாகிஸ்தானின் எப் 16 உள்ளிட்ட3 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது இந்தியா

12

புதுடில்லி: பாகிஸ்தான் விமான படைக்கு சொந்தமான எப் 16 விமானம் மற்றும் 2 ஜேஎப் போர் விமானங்களை இந்தியா ராணுவம் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியது.


பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக நிலை குலைந்து காணப்படும் பாகிஸ்தான், காஷ்மீரில் தற்கொலைப்படை ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. உடனடியாக இந்திய ராணுவம் எஸ் 400 வான்பாதுகாப்பு கவசம் மற்றும் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டன.


இந்நிலையில், பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான எப் 16 போர் விமானம் உள்ளிட்ட3 போர் விமானங்களை இந்திய வான் பாதுகாப்பு கவச அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானின் சர்கோடா நகரில் இருந்து ஜம்மு நோக்கி வந்த எப்.,16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதேபோல் 2 ஜேஎப் போர் விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன.


56 டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன

Advertisement