போர் பதற்றம் எதிரொலி; பிரீமியர் கிரிக்கெட் போட்டி ரத்து: ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேற உத்தரவு

தர்மசாலா : தர்மசாலாவில், டில்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டி நிறுத்தப்பட்டது. மைதானத்தை விட்டு ரசிகர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது.
பிரீமியர் லீக் தொடரின் 58 வது லீக் போட்டி, இன்று தர்மசாலாவில் தொடங்கியது. இந்த போட்டியில் டில்லி அணியும், பஞ்சாப் அணியும் மோதின.
பஞ்சாப் மற்றும் டில்லி அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி மழைக் காரணமாக, டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பிறகு டாஸ் போடப்பட்டது. டாஸில் வென்ற பஞ்சாப் அணி, பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் விளையாட துவங்கிய பஞ்சாப் அணி, 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 122 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆட்டத்தை ரத்து செய்யும்படி அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
போர் பதற்றம் நிலவி பெறுவதால் டில்லி- பஞ்சாப் இடையிலான கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டதையடுத்து வீரர்களை சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் அழைத்து வர பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது
உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, உயர் கோபுர மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. மைதானத்தில் இருந்து ரசிகர்களை உடனடியாக வெளியேற அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
மேலும்
-
கவர்னருடன் நயினார் திடீர் சந்திப்பு
-
'ரோடு ஷோ' உற்சாகத்தில் ஸ்டாலின்
-
துரைமுருகன் வசமிருந்த கனிமவளம் அமைச்சர் ரகுபதியிடம் கொடுத்தது ஏன்?
-
தமிழக கல்வி கொள்கையை அழிக்கும் திட்டம் 'நீட்' தேர்வு: அப்பாவு ஆவேச பேச்சு
-
பாக்., தாக்குதல் முயற்சி; பதிலடியில் இறங்கிய ராணுவம்
-
கொடுக்கல் வாங்கல் பிரச்னை டிரைவர் குத்தி கொலை