'ஓய்வு' அதிகாரி வீட்டில் நகை திருட்டு தம்பதியர் உள்பட 5 பேர் கைது


தர்மபுரி, தர்மபுரியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட் டில், 52 பவுன் நகை திருடு போன வழக்கில், தம்பதியர் உள்பட, 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி அடுத்த வெண்ணாம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ராமநாதன், 66, தொழிலாளர் நலத் துறையில் பணியாற்றி, ஏழு ஆண்டுக்கு முன், பணி ஓய்வு பெற்றார். இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த, 2ல் பெங்களூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு, 5ல் காலை வீட்டிற்கு வந்தார். முதல் மாடிக்கு சென்று பார்த்தபோது வீட்டின் பக்கவாட்டில் உள்ள பால்கனி கதவு உடைக்கப்பட்டு பெட்ரூமில் பீரோவில் இருந்த, 52 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து ராமநாதன் அளித்த புகார்படி தர்மபுரி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், ராமநாதன் வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்ட தேவரெட்டியூர் விஜய், 27, அவரது மனைவி நர்மதா, 21, அவருடைய கூட்டாளிகள் ரஞ்சித், 21, ரெக்ஷன், 20, சந்துரு, 25, ஆகிய, 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 46 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

Advertisement