எர்ணாகுளம்--வேளாங்கண்ணி இடையே கோடை சிறப்பு ரயில்
விருதுநகர்:கோடை விடுமுறையை முன்னிட்டு கேரள மாநிலம் எர்ணாகுளம் --- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மே 14, 21, 28, ஜூன் 4 ஆகிய புதன்கிழமைகளில் இரவு 11:50 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06061) மறுநாள் மதியம் 3:15 மணிக்கு வேளாங்கண்ணி செல்லும். மறுமார்க்கத்தில் மே 15, 22, 29, ஜூன் 5 வியாழக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் மாலை 6:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06062) மறுநாள் காலை 11:55 மணிக்கு எர்ணாகுளம் செல்லும்.
செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாகச் செல்லும் இந்த ரயிலில் ஒரு ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 3 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகள் பெட்டிகள் இருக்கும். முன்பதிவு இன்று துவங்குகிறது.
மேலும்
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு