குறுவை சாகுபடிக்கு ரூ.15,000 ஊக்க நிதி வழங்க வலியுறுத்தல்

சிவகங்கை:ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி அரசு போன்று, தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கென ஏக்கருக்கு 15,000 ரூபாய் ஊக்கநிதி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

தமிழகத்தில், கண்மாய் மற்றும் கிணற்று பாசனம் மூலம் லட்சக்கணக்கான ஏக்கரில் குறுவை சாகுபடியை, மே இறுதி, ஜூனில் விவசாயிகள் துவக்க உள்ளனர்.

குறுவை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்கப்படுத்த ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரியில் ஏக்கருக்கு 15,000 ரூபாய் ஊக்க நிதி வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் இந்த நிதி வழங்கப்படுவதில்லை. தமிழகத்திலும் அதுபோன்று நிதி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

வேளாண்மை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

குறுவை சாகுபடிக்கு ஊக்க நிதி வழங்குவது அரசின் கொள்கை முடிவு. டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு உழவு, விதை, உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் டெல்டா அல்லாத மாவட்டங்களிலும் குறுவை சாகுபடிக்கு கோடை உழவு மானியம் வழங்கப்படுகிறது. விதை, உர மானியம் தருவது குறித்து அரசு அறிவிக்கும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement