அரசு வேலை செய்பவர்களின் ‛லீவ்' ரத்து; கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

புதுடில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், பல மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. மேலும் அரசு வேலை செய்பவர்களின் விடுமுறை ரத்து, மின்தடை உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பஞ்சாப்:
* பாகிஸ்தானுடன் 532 கி.மீ., எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
* ஆறு எல்லை மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
* அனைத்து போலீசாரின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ராஜஸ்தான்:
* பாகிஸ்தானுடன் 1,070 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
* சர்வதேச எல்லைக்கு அருகில், நிர்வாக மற்றும் காவல்துறை ஊழியர்களுக்கான விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
* ஐந்து எல்லை மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
குஜராத்:
* பாகிஸ்தானுடன் 506 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
* உச்சபட்ச விழிப்புணர்வு மற்றும் தயார்நிலையில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம்:
* வங்கதேசத்துடன் 2,217 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
* நிலைமையை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹரியானா:
* அனைத்து அதிகாரிகளும் தங்கள் தற்போதைய பணியிடங்களில் இருக்க வேண்டும் என்று சிவில் சர்ஜன்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
* எந்த அதிகாரியும் மாவட்ட தலைமையகத்தை விட்டு வெளியேற வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
டில்லி:
* மறு அறிவிப்பு வரும் வரை, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசம்:
* பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மாநிலமாக இல்லாவிட்டாலும், பஞ்சாப் எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களான ஹமீர்பூர், உனா, பிலாஸ்பூரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும்
-
அரபிக்கடல் பிராந்தியம் முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது கடற்படை!
-
எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு