இலங்கைக்கு  கடத்த முயன்ற 32 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகே அரியமான் கடற்கரையில் இருந்து படகில் இலங்கைக்கு கடத்திச் செல்ல இருந்த 32 கிலோ கஞ்சாவை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து தப்பி ஓடியவர்களை தேடுகின்றனர்.

உச்சிபுளி அருகே அரியமான் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக ராமநாதபுரம் கியூ போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அதிகாலை 2:30 மணிக்கு கடற்கரையில் ரோந்து சென்ற போது கடலுக்குள் இருந்து ஒரு நாட்டுப் படகும், கடற்கரை சவுக்கு மரப்பகுதியிலிருந்து இருவர் 2 மூடைகளுடன் வந்தனர். அவர்கள் கியூ பிரிவு போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓடிவிட்டனர்.

அவர்கள் விட்டுச் சென்ற இரு மூடைகளில் தலா 2 கிலோ கொண்ட 16 பார்சல்களில் 32 கிலோ கஞ்சா இருந்ததை போலீசார் கைப்பற்றி தப்பியோடியவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement