சூறாவளியுடன் மழை 600 வாழைகள் சேதம்

வடமதுரை:திண்டுக்கல்மாவட்டம் வடமதுரை பகுதியில் நேற்றுமுன்தினம் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு 600 வாழை, 3 தென்னை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

வடமதுரை அடுத்த வேலாயுதம்பாளையம், மூணாண்டிபட்டி பகுதியில் நேற்றுமுன்தினம் மாலையில் பலத்த சூறாவளியுடன் ஒரு மணி நேரம் மழை பெய்தது. சூறாவளி வேகத்தால் வேலாயுதம்பாளையம் பாலசுப்பிரமணி தோட்டத்தில் 200 வாழை, ரவிச்சந்திரன் தோட்டத்தில் 400 வாழை, நாகராஜ் தோட்டத்தில் 3 தென்னை மரங்கள் முறிந்து விழுந்து சேதமாகின. பாதிப்பு விபரங்களை வடமதுரை தோட்டக்கலைத்துறை அலுவலர் மைதிலி தலைமையிலான குழுவினர் கணக்கிட்டனர்.

Advertisement