டிரைவரை தாக்கிய 4 பேருக்கு போலீஸ் வலை

புதுச்சேரி: முன்விரோதம் காரணமாக டிரைவரை தாக்கிய 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

நைனார்மண்டபம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் மாசிலாமணி, 32, இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். நைனார்மண்டபத்தை சேர்ந்த கிரி இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி, கிரி அவரது கூட்டாளிகள் 3 பேர் சேர்ந்,து வீட்டுக்கு சென்ற கொண்டிருந்த மாசிலாமணியை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து, மாசிலாமணி கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, கிரி உட்பட 4 பேரை தேடிவருகின்றனர்.

Advertisement