தி.மு.க., ஆட்சியை வீழ்த்த மக்களே வியூகம் அமைப்பார்கள் * திருப்புத்துாரில் அ.ம.மு.க., தினகரன் பேட்டி
திருப்புத்துார்:தி.மு.க.,வை வீழ்த்த மக்களே வியூகம் வகுக்கிறார்கள். எங்கள் கூட்டணி பலமாகி வருகிறது என திருப்புத்துாரில் அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தினகரன் கூறியதாவது:
2024 லோக்சபா தேர்தலில் நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வர தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றோம். 2026 சட்டசபைத் தேர்தலில் மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர தி.மு.க.,விற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். எங்களது கூட்டணி தான் தி.மு.க.,வுக்கு மாற்றானது. இன்று பல கட்சிகள் இணைந்து வருகிறார்கள். மேலும் சில கட்சிகள் வரும்.
தமிழகத்தில் கூலிப்படை அதிகரித்து 5 ஆயிரத்திற்கும் 10 ஆயிரத்திற்கும் கொலை செய்யும் நிலையில் தான் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை உள்ளது. சிறுமி முதல் மூதாட்டி வரை இன்று பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர்.
ஸ்டாலினுக்கும், அவரது குடும்பத்திற்கு வேண்டுமானால் தமிழகம் அமைதிப்பூங்காவாக இருக்கலாம். மக்களுக்கு அப்படி இல்லை. தி.மு.க.,வை வீழ்த்த மக்களே வியூகம் வகுக்கிறார்கள். எங்கள் கூட்டணி பலமாகி வருகிறது என்றார்.
மேலும்
-
அரபிக்கடல் பிராந்தியம் முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது கடற்படை!
-
எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு