அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் புதிய விளையாட்டு அரங்கம் திறப்பு

வில்லியனுார்: அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி வளாகத்தில் ரூ.5.5 கோடி செலவில் புதியதாக நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், வாலிபால், கால் பந்து, டென்னீஸ், கூடைப்பந்து உள்ளிட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம் அமைத்துள்ளனர்.

புதிய விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் சேர்மன் ராமசந்திரன் தலைமை தாங்கினார். ராமச்சந்திா கல்வி அறக்கட்டளை நிர்வாகி ராதாராமச்சந்திரன், கல்லுாரி மேலாளர் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல் மருத்துவ கல்லுாரி முதல்வர் செந்தில்நாதன் வரவேற்றார். புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம் விளையாட்டு அரங்கை திறந்துவைத்து ஒவ்வொரு அரங்கிற்கும் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தி விளையாட்டை துவக்கிவைத்தார். அரியாங்குப்பம் எம்.எல்.ஏ., பாஸ்கர் வாழ்த்துரை வழங்கினார்.

இவ்விழாவில் கல்விக் குழுமத்தின் தலைமை இயக்க அதிகாரி டாக்டர்.வித்யா, கல்லுாரி இயக்குனர் டாக்டர்.ரத்தினசாமி, சிறப்பு அதிகாரி ரமேஷ், வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் கீழ் இயங்கி வரும் கல்லுாரி முதல்வர்கள், பல்வேறு துறை பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், நிர்வாக அதிகாரிகள், ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர்கலந்துகொண்டனர். மருத்துவ கல்லுாரி துணை முதல்வர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

Advertisement