திருக்கல்யாண உற்சவம்

புதுச்சேரி: புதுச்சேரி, கொட்டுப்பாளையம், இ.சி.ஆரில் நாகாத்தம்மன் கோவிலில் 22ம் ஆண்டு மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிக்கும், 9ம் ஆண்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் சுவாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.

இதையொட்டி, காலை நாகாத்தம்மன் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

முக்கிய நிகழ்வாக காலை 8:35 மணி முதல் 8:59 மணி வரை மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

பின்னர், காலை 8:59 மணி முதல் 9:30 மணி வரை ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement