சாரம் நாகமுத்துமாரியம்மன் கோவிலில் குரு பெயர்ச்சி விழா

புதுச்சேரி: புதுச்சேரி சாரம் முத்துவிநாயகர், சுப்ரமணிய சுவாமி, நாகமுத்துமாரியம்மன் கோவிலில் குரு பெயர்ச்சி விழா வரும் 11ம் தேதி நடக்கிறது.

குருபகவான் வரும் 11ம் தேதி மதியம் 1:19 மணிக்கு ரிஷபம் ராசியிலிருந்து மிதுனம் ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனை முன்னிட்டு காலை 11:00 யாகசாலை பூஜை, ேஹாமம், 12:00 மணிக்கு மகா அபிேஷகம், 1:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி தீபாராதனை, கலசம் புறப்பாடு, மதியம் 1:19 மணிக்கு கலசாபிேஷகம் அலங்காரம் மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பொன் நீலகண்டன் செய்துள்ளார்.

Advertisement