மதுபாட்டில் கடத்திய பெண் கைது

விருத்தாசலம்: மதுபாட்டில்கள் கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார், கோ.பூவனுார் ரயில்வே கேட் அருகே நேற்று மாலை ரோந்து பணி சென்றனர். அப்போது, அவ்வழியாக சந்தேகத்தின்பேரில் வந்த மொபட்டை நிறுத்தி சோதனை நடத்தினர்.

இதில், 96 மதுபாட்டில்கள் இருப்பது தெரிந்தது. விசாரணையில், ஆலடி, கன்னியங்குப்பம் அப்பாவு மனைவி சாவித்திரி, 38, என்பதும், மதுபாட்டில்களை விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து, சாவித்திரியை கைது செய்து, 96 மதுபாட்டில்கள், மொபட், மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement