93.97 சதவீதம் பேர் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி; 20 பள்ளிகள் 'சென்டம்'

ஊட்டி; நீலகிரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வில், 93.97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம், பிளஸ்- 2 பொதுத்தேர்வு நடந்தது. தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. நீலகிரியில், 93.97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதில், அரசு பள்ளிகளில் படித்தவர்கள், 89.77 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில், 20 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

'சென்டம்' பள்ளி விபரம்



அதிகரட்டி, அணிக்கொரை, தாவணெ அரசு மேல் நிலைப்பள்ளிகள்; நீலகிரி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, குன்னுார்; அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி, குஞ்சப்பனை; புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, குன்னுார்; ஸ்ரீ சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குன்னுார்; ஸ்ரீ சாந்தி விஜய் மேல்நிலைப்பள்ளி, மசினகுடி; பாரத் மாதா மேல்நிலைப்பள்ளி, உப்பட்டி ஆகியவை, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

மேலும், புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோத்தகிரி; புனித சூசையப்பர் ஆங்கிலோ இந்திய ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குன்னுார்; வெடி மருந்து தொழிற்சாலை மேல்நிலைப்பள்ளி, அருவங்காடு; நீலகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, லவ்டேல்; பாண்டியராஜ் நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோத்தகிரி; ஆல்பா ஜி.கே., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரவேனு; ஸ்ரீ சத்ய சாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அகலார்; நீலகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எருமாடு; புனித அந்தோனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கூடலுார் டிவிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பந்தலுார்; ஜி.ஆர்.ஜி., நினைவு மேல்நிலைப்பள்ளி வாழைத்தோட்டம் ஆகிய, 20 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

Advertisement