ஓ.டி.டி., தளங்களுக்கு மத்திய அரசு புது உத்தரவு

தேசிய பாதுகாப்பை அச்சுறுத்துவது மட்டுமல்லாமல், வெளிநாடுகளுடனான உறவுகளையும் பாதிக்கும் வகையில், பாகிஸ்தானை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படங்களை உடனே நிறுத்தும்படி இந்தியாவில் உள்ள அனைத்து ஓ.டி.டி., எனப்படும், 'ஆன்லைன்' பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை வழங்கும் தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், வலை தொடர்கள், பாடல்கள் மற்றும், 'பாட்காஸ்ட்' எனப்படும், 'ஆன்லைன்' ஒலி வடிவ நிகழ்ச்சிகளையும் உடனடியாக நிறுத்தும்படி அறிவுறுத்தி உள்ளது. இது தவிர, வன்முறையைத் துாண்டும் அல்லது பொது ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், ஓ.டி.டி., தளங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement