ஊடுருவ முயன்ற பாக்., நபர் சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய சர்வதேச எல்லையில் நேற்று அதிகாலை, பாகிஸ்தான் பகுதியிலிருந்து ஒரு நபர், பதுங்கியபடி நம் எல்லைக்குள் நுழைய முயன்றார். இருளிலும் அந்த நபரை கண்காணித்த எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள், அவரை எச்சரித்தனர்.

எனினும், அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்னேறிய அந்த நபரை, நம் வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இதற்கு முன், பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் நபரை, நம் வீரர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்.

அதற்கு சில நாட்களுக்கு முன், பாகிஸ்தான் ராணுவத்திற்கு உதவி புரியும் 'ரேஞ்சர்ஸ்' குழுவைச் சேர்ந்த ஒருவரை, நம் வீரர்கள், ராஜஸ்தானில் பிடித்தனர்.

Advertisement