துவரிமானில் துயரம் தீருமா

துவரிமான்: மதுரை துவரிமானில் அடிப்படை வசதிகளை சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூகஆர்வலர் பாலாஜி கூறியதாவது: ஆண்கள் கழிப்பறை பயன்பாட்டில் இருந்தாலும் போதிய பராமரிப்பு இல்லை.

இரட்டை வாய்க்கால் முதல் கீழத்தெரு வரை போதுமான தெரு விளக்குகள் இல்லை. அக்ரஹாரம் பகுதியில் வீதி புதர் மண்டியுள்ளது. தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ஏராளமான நாய்கள் கூட்டமாக திரிகின்றன. பொது மக்களை விரட்டி கடிக்கின்றன. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement