டி.கல்லுப்பட்டியில் மின்அழுத்த பிரச்னை

டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டி ராமுண்ணி நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் குறைந்த மின்னழுத்த பிரச்னையால் வீடுகளில் மின்சார சாதனங்கள் சேதமடைகின்றன.

இங்கு இருக்கும் டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மின் இணைப்பு பெற்றுள்ளன. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து குறைந்த அழுத்த மின் பிரச்னையால் வீடுகளில் உள்ள எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சேதமாகி வருவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சீரான மின்சாரம் வழங்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement