அ.தி.மு.க., செய்யாததை செய்துள்ளோம்: மூர்த்தி
மதுரை: ''அ.தி.மு.க.,வினர் பத்தாண்டுகளில் செய்யாதவற்றை 4 ஆண்டுகளில் நிறைவேற்றி தந்திருக்கிறோம்,'' என, மதுரை ஒத்தகடையில் நடந்த தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசினார்.
அவர் மேலும் பேசியதாவது:
ஜூன் 1 ல் தி.மு.க., வரலாற்றில் இடம்பெறக்கூடிய ஒரு நிகழ்வாக மதுரை உத்தங்குடியில் பொதுக்குழு கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாய்ப்பு தந்துள்ளார். மதுரை கிழக்குதொகுதியை பொறுத்தவரை வாக்குறுதிகளை 90 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம் என்றார்.
தி.மு.க., புதூர் வட்டக்கழகம் சார்பில் புதூரில் நடந்த கூட்டத்திற்கு பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி தலைமை வகித்தார். மேயர் இந்திராணி பொன் வசந்த், எம்.எல்.ஏ., தளபதி, முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், முன்னாள் மேயர் குழந்தைவேல் உள்ளிட்டோர் பேசினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
Advertisement
Advertisement