லாலு பிரசாத் மீது நடவடிக்கை; ஜனாதிபதி முர்மு அனுமதி

புதுடில்லி : பீஹாரை சேர்ந்த லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வே குரூப் 4 பணியாளர்கள் நியமனத்திற்கு, அவரும், அவரின் குடும்பத்தினரும் லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
ரயில்வே துறையில் பணி வழங்க, பயனாளிகள் தங்களின் நிலங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு வழங்கினர் என சி.பி.ஐ., கூறியது.
அந்த வழக்கில், பண மோசடி நடந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை, 2024ல் டில்லி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
பண மோசடியில் லாலு மற்றும் அவரின் குடும்பத்தினர் ஈடுபட்ட விவகாரத்தை விசாரித்து வரும் அமலாக்க துறையினர், லாலு பிரசாத் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதிக்குமாறு, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் கேட்டிருந்தனர்.
சமீபத்தில் அதற்கான அனுமதியை ஜனாதிபதி முர்மு வழங்கியுள்ளார் என, ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.



மேலும்
-
எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு