'ரோடு ஷோ' உற்சாகத்தில் ஸ்டாலின்

திருச்சி, : திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலைய திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, நேற்று காலை முதல்வர் ஸ்டாலின் திருச்சி வந்தார்.

மாலை, 5.45 மணியளவில் டி.வி.எஸ்., டோல்கேட் பகுதியில் இருந்து ரோடு ஷோவை துவக்கினார்.

சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று, முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, நடந்து சென்ற முதல்வர் ஸ்டாலின், தலைமை தபால் நிலையம், கன்டோன்மென்ட், நீதிமன்றம், மாவட்ட மருத்துவமனை வழியாக புத்துார் சென்றார். அங்கு புதிதாக அமைக்கப்பட்ட சிவாஜி சிலையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து ரோடு ஷோவில் பங்கேற்ற முதல்வர், 6 கிலோ மீட்டர் துாரத்துக்கும் மேலாக ஒன்றரை மணி நேரம் நடந்து சென்று மக்களை சந்தித்தார்.

Advertisement